கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம்.கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம். ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம். Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன. Undo Send: இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம். Snake: கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும். Attachment Detector: அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது. Hide Unread Counts: நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது. Vacation Time : வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும். You Tube Preview உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம். Insert Image: இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம். |
தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz)
முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான்.
மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.
இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது 'Buzz' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.
உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம்.
இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த பேஷன் டிசைனர் மாணவியான ஜியோர்ஜி டேவிஸ், சோனி எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள மகளிருக்கான ஆயத்த ஆடை, செல்போன் அழைப்பு வந்தால் ஒளிர்கிறது.
இந்த உடையை ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா லண்டனில் அறிமுகப்படுத்தினார்.
தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிரும் உடையை உருவாக்கியதாகவும், செல்போனில் உள்ள புளூ-டூத் வசதியைப் பயன்படுத்தி, இந்த ஒளிரும் உடை செயல்படுவதாகவும் ஜியோர்ஜி கூறியுள்ளார்.
பொதுவாக, டிஸ்கோதே, பார் உள்ளிட்ட அதிக சப்தம் நிறைந்த இடத்தில், செல்போன் அழைப்பு வந்தால் அது சம்பந்தப்பட்டவருக்கு கேட்காது. இதனால் அந்த அழைப்பு மிஸ்டு கால் ஆகிவிடுவதுண்டு.
சில முக்கியமான அழைப்புகளை கூட நாம் தவறவிட்டு விடுவது உண்டு. இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒளிரும் உடையை வடிவமைத்தேன் என்கிறார் ஜியோர்ஜி