

கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம்.கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம். ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம். Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன. ![]() Undo Send: இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம். Snake: கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும். Attachment Detector: அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது. Hide Unread Counts: நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது. Vacation Time : வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும். You Tube Preview உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம். Insert Image: இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம். |
முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான்.
மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.
இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது 'Buzz' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.
உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம்.
இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
bit.ly தளம் மிக நீளமான இணைய முகவரிகளை சுருக்கி மற்றைய தளங்களில் இலகுவாக பகிர்ந்து கொள்ள உதவி செய்கிறது. தற்போது மேலும் பல வசதிகளை இத்தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத் தளத்தில் நீங்கள் பதிவு செய்து கொண்டால் சுருக்கப்பட்ட இணைய முகவரிகளை சேமித்து வைத்து கொள்ளவும் அவற்றை தேவையான போது மீண்டும் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.
இதனை பயன்படுத்த எந்த ஒரு கம்ப்யூட்டர் மொழியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் மிக எளிய வகையில் செய்து விடலாம். இதை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட ஓர் விளையாட்டை உருவாக்கிவிடும். மைக்ரோசொப்டின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்கது.
கம்ப்யூட்டர் அனைவருக்கும் உரிய சாதனமாகும் மைக்ரோசொப்டின் முயற்சியில் இது ஒரு மைல்கல். இந்த சாப்ட்வேர்ஐ பயன்படுத்தி மைக்ரோசொப்டின் Xbox எனப்படும் சாதனத்துக்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம்.
பார்ப்பதற்கு ஸ்லேட் போன்றே இருப்பதால் இதை ஸ்லேட் என்று அழைத்தாலும்தவறு இல்லை. இந்த டேப்ளட்கள் விரைவில் ஆப்பிள், டெல், ஹெச்பி, மோட்டோரோலா, லெனோவா என அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்தஉள்ளன.
லாஸ் வேகாசில் இந்த வாரம் நடைபெறவுள்ள புதிய நுகர்வோர் மின்னணுபொருட்கள் கண்காட்சியில் இந்த டேப்ளட்கள் காட்சிக்கு வர உள்ளன. ஸ்மார்ட்போன்கள் எனப்படும் நவீன செல்போன்களுக்கும், லேப்டாப்களுக்கும் இடையேஉள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த டேப்ளட்கள்அமைந்திருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ள 10 அங்குலம் அளவிலான டேப்ளட் குறித்தஅறிவிப்பு இம்மாதம் 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது. செல்போன்களில்ஐபோன் ஏற்படுத்திய மாற்றத்தை கம்ப்யூட்டர்களில் இந்த டேப்ளட் ஏற்படுத்தும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அளவை விட குறைவான அளவில் கூட டேப்ளட்கள் வந்து புரட்சியைஏற்படுத்தப் போவதாக என்விடியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஜென் சுன்ஹுவாங் தெரிவித்துள்ளார்.
இந்த டேப்ளட்கள் 500 டாலர் என்ற அளவில் விலை இருக்கக்கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செல்போன்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.
இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செல்போனில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
யு–ட்யூப்புடன் யுனிவர்சல் மியூசிக் குரூப் , சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கை கோர்த்துள்ளன. இந்த திட்டத்திற்கென இந்த நிறுவனங்கள் 30 கோடி டாலர் வழங்கியுள்ளன.
தற்போது இந்த இணைய தளத்தில் 5,191 கலைஞர்களின் 14,675 வீடியோக்கள் உள்ளன. 20 வகையான வீடியோ இசை ஆல்பங்கள் கிடைக்கின்றன. இந்த தளத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பிளே லிஸ்ட்டுகள் உள்ளன.